சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் முதல்வரின் மகன்
மதுரை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மதுரையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிஅறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பில் தி.மு.க.தரப்பில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வரின் மகனான மு.க. அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்துமதுரையில் வன்முறை வெடித்தது. பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தி.மு.க.விலிருந்து தனிமைப் படுத்தப்பட்டார் மு.க.அழகிரி. அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் ஸ்பெஷலாக கவனிக்கப்பட்டனர்.
அழகிரி நீக்கப்பட்டபின் அவரது ஆதரவாளர்கள் அழகிரி எழுச்சி பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்
இந்த நேரத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மதுரையிலிருந்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளுக்காக அழகிரி எழுச்சி பேரவையால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவின் போது அவர் பேசுகையில், எனக்கு50 வயதாகிறது. பொறுமையாக இருந்து சமாதானமாக போக வேண்டும் என பலரும் பேசினார்கள்.
நான் எந்த தவறும் செய்யாத போது நான் ஏன் சமாதானமாக போக வேண்டும்?
அண்ணா காலத்திலிருந்து, என்னை நீக்கும் வரை கட்சியில் இருந்து பணியாற்றி வந்துள்ளேன். நான் எந்த பதவிக்கும் ஆசை பட்டதில்லை. நான் நினைதிருந்தால்எப்போதோ பதவிகளை பெற்றிருக்க முடியும். இப்போது எம்.எல்.ஏவாகி மக்களுக்கு சேவை செய்யலாம் என நினைக்கிறேன்.
நான் இருந்தால்தான் தி.மு.க. வளரும் என பலரும் கூறினார்கள். தி.மு.க. வளர்கிறதோ இல்லையோ சமுதாயம் வளர வேண்டும். எங்கு போட்டியிடுவதுஎன முடிவு செய்யவில்லை. உங்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்த பின்தான் நான் எந்த முடிவையும் எடுப்பேன்.
பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள். என் ஆதரவாளர்களை எல்லாம் பதவியிலிருந்து நீக்கினார்கள். அவர்கள் என்னதவறு செய்தார்கள்?. பல கவுன்சிலர் மீது பொய் வழக்கு போட்டப்பட்டுள்ளது. அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?
8 பேர் தேசிய பாது காப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர் அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இவர்களை யாரும் சிறையில் சென்றுபார்க்கவில்லை.
நான் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு வாரம் ஒன்றுக்கு 500 ரூபாய், 1,000 ரூபாய் கொடுத்து வருகிறேன்.
கட்சிக்காக பாடுபட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அழகிரி ஆதரவாளர்கள் என பலர் அடி வாங்கினர். அழகிரி ஆதரவாளன் பலரிடம் எழுதிவாங்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் பற்றி கட்சி நிர்வாகிகள் ஏதாவது கேட்டார்களா? இவை எல்லாம் கட்சி தலைமைக்கு தெரியாதா?
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் குடும்பத்துக்கு நான் ரூ 10,000 வழங்குகிறேன். இதை கட்சியின் மாவட்ட நிர்வாகமோ அல்லதுகட்சி தலைமையோ வழங்க முன் வரவில்லை. இதை எல்லோரும் யோசித்து பார்க்க வேண்டும் என்றார்.
சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜனை கடுமையாக தாக்கி வருகிறார் மு.க. அழகிரி. இவர் பழனிவேல் ராஜனை எதிர்த்து போட்டியிடலாம்என்று தி.மு.க. கருதுகிறது.












Click it and Unblock the Notifications