8 குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை
கார்வார்:
கணவனின் முரட்டுத்தனத்தால் தன் 8 குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்சுசீலா என்ற பெண். அதிரிச்சி தரும் இந்த துயர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடகா, கார்வார் மாவட்டம், அங்கோலா தாலுகா, குண்டபாளா கிராமத்திலிரக்கும் மரக்காலுமஜ்ரேயில் வசித்துவந்தவர் கணபதி குசலப்பா என்னும் கச்சு நாயக். இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்.
இவரது மனைவி சுசீலா (45). இவர்களுக்கு மீனாட்சி (25), தாரா(21), பிரம்மா (19), மீரா (16), சசிகலா ஸ்ரீ14),ஜோதி (12), என்று 6 மகள்களும், ஸ்ரீகாந்த் (23), கிரண் (8) என்ற 2 மகன்களுமாக 8 குழந்தைகள் உள்ளன.,
கச்சு நாயக் மீது ரெளடி செயல்களிலும், அடி தடி செயல்களிலும் ஈடுபட்டதாக பல வழக்குகள் உள்ளன.இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் வாசுதேவ் நாயக் என்பவருடன் தகராறு செய்து அவரது கையைவெட்டி விட்டார். இதனால் கச்சு நாயக் கைது செயய்ப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த பின்னரும் விடாமல் கச்சு நாயக் வாசுதேவிடம் தகராறு செய்தார். இதனால் வருத்தமடைந்தசுசீலா குழந்தைகளுடன் தர்மஸ்தலா சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்தார். ஆனாலும் கச்சு நாயக்மாறவில்லை.
மிகவும் மன வேதனையடைந்த சுசீலா தன் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்தார்.
சுசீலா, மீனாட்சியையும், ஸ்ரீகாந்தையும் கல்காவளி ஆற்றில் தள்ளி கொலை செய்தார். தாராவையும், கிரணையும்ஆற்றுக்கு அருகே தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார். சுசீலாவுடன் பிரம்மா, மீரா, சசிகலா ஜோதி ஆகியோர்விஷம் குடித்து இறந்தனர்.
தன் குழந்தைகளுடன் கலந்து பேசிய பின்பே சுசீலா இந்த வேதனை தரும் முடிவுக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications