பயணிகள் கட்டணம் உயரும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேற்கு வங்க தேர்தலுக்கு பின் கட்டண உயர்வு இருக்குமா எனக்கூற நான் ஜோஸியக்காரன் அல்ல. தேவையேற்பட்டால் அது எப்போதுவேண்டுமானாலும் உயர்த்தப்படலாம் என்கிறார் ரயில்வே வாரிய தலைவர் அசோக் குமார்.

திங்களன்று நண்பகல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேற்கு வங்கத்தேர்தலுக்காகத் தான் கட்டணத்தை அமைச்சர் மம்தா பானர்ஜி உயர்த்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ரயில்வே வாரிய தலைவர், பயணிகள் கட்டண உயர்வு குறித்து பின்னர் முடிவுசெய்யப்படும்.

ரயில்வே இருப்புப்பாதைகளை மாற்றியமைக்க கன்னா கமிஷன் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசிடம் 15000 கோடி ரூபாய்கேட்கப்பட்டுள்ளது. இதுவரை தகுந்த பதில் கிடைக்கவில்லை.

தற்போது நடைபெற்றுவரும் திட்டங்கள் அனைத்தையும் அவற்றின் திட்ட காலத்திற்குள் முடிப்பதற்கு வசதியாக மேற்கொண்டு புதிய திட்டங்கள் எதுவும்அறிவிக்கப்படவில்லை.

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ஒரு தனி சுற்றுலா ரயில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பேலஸ்ஆன் த வீல்- ரயில்களை விட பரீசீலிக்கப்பட்டு வருகிறது.

ரயில்வேக்கு வருவாய் வரக்கூடிய வகையில் இனிமேல் கேட்டரிங் துறை, விளம்பரத்துறை, மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட டெண்டர்கள் அனைத்தும்சிங்கிள் விண்டோ சிஸ்டம் எனப்படும் ஒற்றைச் சாளர வழிமுறைப்படி அனுமதி அளிக்கப்படும்.

மேலும், தற்போது நாடெங்கிலும் உள்ள பொது தொலைபேசி நிலையம்(டெலிபோன் பூத்) போல் ரயில்வே பயணச்சீட்டு அளிக்கும் நிலையங்கள் அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+