ஈரோட்டை கலக்கும் முகமூடிக் கும்பல்
ஈரோடு:
ஈரோடு அருகே அதிகாலையில் கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரோடு திண்டல் அருகே உள்ள சாண்டிநகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (49). இவர் விவசாயம் செய்துவருகிறார். இவரது மனைவி சந்தோசம் (42), மகன் ராஜா (21), சங்கர் (18) ஆகியோருடன் இரவில் வீட்டில் படுத்துதூங்கிக் கொண்டிருந்தார்.
திங்கள்கிழமை அதிகாலையில் முகமூடி அணிந்த சிலர், அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்தநாய் குரைத்துள்ளது. இந்த சத்தம் கேட்டவுடன் முகமூடி அணிந்த கொள்ளையர்கள், நாயைக் கண்ட துண்டமாகவெட்டிப் போட்டனர்.
இதைக் கண்ட தட்சிணாமூர்த்தி அவசர அவசரமாக போலீசாருக்குப் போன் செய்ய முயன்றார். அப்போதுஅவர்கள், போன் வயரை அறுத்து இணைப்பைத் துண்டித்தனர். கதவை தாளிட்டு தப்பிக்க முயன்றார்தட்சிணாமூர்த்தி.
ஆனால் கொள்ளையர்கள் விடவில்லை. அம்மிக் கல்லைத் தூக்கிப் போட்டு கதவை உடைத்தனர். பின்னர், அவரதுமகன்கள் அணிந்திருந்த மோதிரம் உள்பட 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச்சென்றனர்.
தட்சிணாமூர்த்தி இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications