எதியோபியாவில் அமைதி ஏற்படுத்த தயாராகிறது இந்திய படை
டெல்லி:
ஐ.நா.அமைதி காக்கும் படையில் உள்ள இந்திய வீரர்கள் மிகவும் பதட்டமான பகுதிகளான எதியோபியா மற்றும்எரிடெரியாவுக்கு மார்ச் 6 அல்லது 7 ம் தேதி செல்லவுள்ளனர் என்று இந்திய ராணுவ துணைத் தலைவர்லெப்டினன்ட் ஜெனரல் விஜய் ஒபேராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.நா.அமைதி காக்கும் படையில் உள்ள 318 இந்திய வீரர்கள் கலவரம் நடக்கும்எதியோபியா மற்றும் எரிடெரியா பகுதிகளுக்கு விரைவில் செல்லவுள்ளனர்.
எதியோபியா மற்றும் எரிடெரியா செல்லும் அவர்கள் மிகவும் தோழமை உணர்வுடன் செயல்பட்டு அங்குஅமைதியை நிலைநாட்ட முயற்சி எடுப்பார்கள்.
ஏற்கனவே பல முறை ஐ.நா. அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் உலக அளவில் கலவரம் நடந்துகொண்டிருக்கும் பல நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். அமைதிஏற்படுத்துவதற்காக இந்த முறை எதியோபியா மற்றும் எரிடெரியா செல்லும் இவர்கள் தங்களது முயற்சியில்வெற்றி பெறுவார்கள் என நம்பலாம்.
இந்திய அமைதி காக்கும் படையினர் மார்ச் 6 அல்லது 7 ம் தேதி ஆப்பிரிக்கா செல்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, எதியோபியாவுக்கும், எரிடெரியாவுக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக சண்டை நடந்துவருகிறது. அங்கு அமெரிக்க அமைதி காக்கும் படையினர் சென்று அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில்இறங்கியுள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை எதியோபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி திட்டத்தின்முதல் கட்டமாக நாங்கள், எரிடெரியாவிலுள்ள எங்களது வீரர்களை வாபஸ் வாங்கி விட்டோம் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications