சின்ஹா, என்ன செய்யப்போகிறார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள கலவரமான இந்திய பொருளாதாரத்தை காணும்போது மத்திய நிதியமைச்சரின் பொது பட்ஜெட்தாக்கல் செய்யும் பணி கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்ற கணக்கு வழக்கை மட்டும் தாக்கல் செய்யும் பணியாக இருக்காது எனத் தெரிகிறது.

அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையால் இந்திய தொழில்துறை பாதிக்கப்ட்டுள்ளதால் உள்நாட்டு தொழில்களை காப்பாற்ற நடவடிக்கைஎடுக்க கோருகின்றன இந்திய தொழில்துறை கூட்டமைப்புகள்.

மற்றொரு புறம் உலக வர்த்தக அமைப்பிடம் ஒத்துக்கொண்டதற்கிணங்க வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் அனைத்து பொருட்களும் தடையின்றிஇந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்க பட வேண்டியுள்ளது.

டெல்லியை சேர்ந்த பொருளாதார நிபுணரான சுபீர் கோகர்ன் கூறும் போது, நிதியமைச்சருக்கு பொருளாதார நிலைமையை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள்தெளிவு படாத நிலையில் ஏதாவது செய்து தொழில்துறையை காக்க கோருகின்றன வர்த்தக அமைப்புகள்.

குறைந்துவரும் நாட்டின் மொத்த உற்பத்தியால் வரிவருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உலக வர்த்தக அமைப்பிடம் ஒத்துக்கொண்டது போல்,மத்திய விற்பனை வரி விகிதங்களையும் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இதனால் மத்திய வரி வருவாயில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

கடந்தாண்டு நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 6.4 ஆக இருந்தது. நடப்பாண்டில் இந்த வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கூறும்பொருளாதார ஆய்வறிக்கை விலைவாசி உயர்வு கடந்தாண்டு 3.6 சதவீதமாக இருந்து தற்போது 8.2 சதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது.

விலைவாசி உயர்வை தடுக்க பட்ஜெட் பற்றாக்குறை குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை சின்ஹாவிற்குஉள்ளது.

இடையில் ஏற்பட்ட குஜராத் பூகம்ப பாதிப்பால் நேரடி வரிவிதிப்பான வருமானவரியில் கைவைத்து விட்டதால் (2% கூடுதல் சர்சார்ஜ்) தனிநபர் மற்றும்நிறுவனங்களுக்கான வருமான வரியில் மாற்றம் செய்ய வாய்ப்பு குறைவு.

மறைமுக வரிவிதிப்பை பொருத்த வரையில் உள்நாட்டு உற்பத்தி குறைவால் எக்ஸைஸ் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வேறு வருவாய் ஆதாரங்களைஆராயும் போது சேவை வரிவிதிப்பு வலையில் வளர்ந்து வரும் கம்யூட்டர் துறை உள்ளிட்டவைகளை கொண்டுவருவது தான் சின்ஹாவின் முடிவாக இருக்கும்.

கம்ப்யூட்டர் துறைக்கு மேலும் சலுகைகளை கேட்காவிடினும், ஏற்கனவே உள்ளவற்றை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என அத்துறைகோரிக்கை விடுத்துள்ளது.

பனாந்திகர் என்ற வர்த்தக நிபுணர் கூறும் போது, பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு மானியங்களை குறைப்பதோடு மத்திய அரசுநிறுவன பங்குகள் விற்பனையை விரைவில் முடிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ஆனால், மத்திய அரசின் நிறுவன பங்குகள் விற்பனைக்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் பங்குகள் விற்பனை விரைவில்முடிய சாத்தியமில்லை.

யஷ்வந்த் சின்ஹா நாட்டின் தொழில்துறையை காப்பாற்ற இருக்கிறாரா? தள்ளாடும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த இருக்கிறாரா என்பது புதனன்றுபட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது தான் தெரிய வரும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+