தனி ஈழம் கோரிக்கையை கைவிடும் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் அமைதி திரும்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனது தனி நாடுகோரிக்கையை கைவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஈழம் வேண்டும் எனக்கோரி அரசுப்படைகளுடன் மோதி வரும் விடுதலைப்புலிகள் இயக்கம் இவ்வாறுகூறியுள்ளதாக கூறப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாண பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள புலிகள் அமைப்பு, அங்கு தனி அரசாங்கம் அமைத்து வரி வசூல் செய்வதுஉள்ளிட்ட நிர்வாகப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்த தலைவர்கள் பலர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பயிற்சிக்களமாக இருந்ததோடு அந்தஇயக்கத்தை வளர்த்து ஆதரித்து வந்தது இந்தியா. அதன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதால் தடை விதிக்க வேண்டிய சூழ்நிலைஇந்தியாவிற்கு ஏற்பட்டது.
பாரீஸில் தலைமையகத்தை கொண்ட புலிகள் அமைப்பு, தனது புலிகளின் குரல் என்ற வானொலி சேவையை லண்டனிலிருந்து ஒளிபரப்பி வந்தது.
இங்கிலாந்து தற்போது புதிதாக கொண்டுவந்துள்ள தீவிரவாத தடை சட்டத்தின் கீழ் தங்களது இயக்கத்தை தடை செய்யக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்புலிகள்.
அத்தடையிலிருந்து தப்பிக்கவும், தாங்கள் தீவிரவாதிகள் அல்ல, விடுதலைக்காக போராடுபவர்கள் என்பதை காட்டுவதற்காகவும் கடந்த மூன்றுமாத காலமாக சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மீறி தடை விதித்தால் நார்வே அமைதிக்குழு எடுத்து வரும் அமைதி முயற்சிக்கு ஒத்து கொள்ள மாட்டோம் என அவ்வப்போது மிரட்டி வருகின்றனர்புலிகள்.
ஐரோப்பிய யூனியன் போன்றவை இதனை கண்டு கொள்ளாமல் புலிகள் அமைப்பை பிரிட்டன் தடை செய்ய வேண்டும் என்கின்றன.
இதனிடையே, பல மதத்தலைவர்களைக் கொண்ட தேசிய அமைதிக்குழு கடந்த வாரம் விடுதலைப்புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது நாட்டில்அமைதி திரும்புவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டால் புலிகள் இயக்கம் தனி நாடு கோருவதை கைவிடுவர் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில், அமைதிக்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இச்செய்தி தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மற்ற தகவல்கள்:
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சுமுகமான அரசியல் தீர்வு காணும் பொருட்டு உருவாக்கப்பட்ட தேசிய அமைதிக்குழு, அரசின் அனுமதியுடன், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் புலிகளின் அரசியல் குழு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
புலிகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக அரசும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை நடந்து முடிந்த சிலமணிநேரங்களிலேயே, கூட்டம் நடந்த இடத்தை அரசுப்படைகள் தாக்கியது வருத்தத்திற்குரியது. அங்கிருந்து புலிகள்தலைவர்கள் சென்று விட்டாலும், பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் தாக்குதல் நடைபெற்றது பேச்சுவார்த்தையை பாதிக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications