விசாகப்பட்டினம் மியூசியத்தில் நீர்மூழ்கிக் கப்பல்
டெல்லி:
1971 ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த சண்டையில் உறுதுணை புரிந்த, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமானஐ.என்.எஸ் க்ருசூரா நீர்மூழ்கிக் கப்பல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம்விசாகப்பட்டினத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
கடற்படை முன்னாள் தலைவர் அட்மிரல் வி.எஸ்.ஷேகாவட், க்ருசூரா நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டினஅருங்காட்சியகத்தில் வைத்தார்.
இதுகுறித்து இந்தியக் கடற்படை செய்தித்தொடர்பாளர் ராகுல் குப்தா கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும் விசாகப்பட்டினம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் க்ரூசூராநீர்மூழ்கிக் கப்பல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக்க கப்பல் கடற்படை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் வைத்து சில மாற்றங்கள்செய்யப்பட்டு மீண்டும் வடிவமைக்கப்பட்ட பின் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எஸ். க்ரூசூரா 1969 ம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தநீர் மூழ்கிக் கப்பல் போர்க்காலங்களில் மிகவும் உறுதுணை புரிந்துள்ளது. சுமார் 31 வருடங்கள் தரம் வாய்ந்த,சிறந்த நீர் மூழ்கிக் கப்பலாகச் செயல்பட்டுள்ளது.
1971 ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரின் போது இது திறம்படசெயல்பட்டது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான அனைத்து நீர்மூழ்கிக்க கப்பலும் விசாகப்பட்டினத்தில் தான் உள்ளன. மேலும்ஐ.என்.எஸ் விர்பா, ஐ.என்.எஸ் சாத்வாகனா ஆகியவகையும் விசாகப்பட்டினத்திலேயே உள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications