புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து தடை
லண்டன்:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்படக்கூடிய தீவிரவாத இயக்கங்களின் பட்டியல் ஒன்றை இங்கிலாந்தின்உள்துறை வியாழனன்று வெளியிட்டது.
இங்கிலாந்தின் தடைச் சட்டம் பிப்ரவரி 19ல் அமலுக்கு வந்தது. அச்சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் முதல் பட்டியலில் 21 இயக்கங்கள்இடம்பெற்றிருக்கின்றன.
இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டும் இயக்கங்கள்:
இலங்கையின் கோரிக்கைக்கு ஏற்ப தடைசெய்யப்படவுள்ள விடுதலைபுலிகள் அமைப்போடு, இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டி வரும் லஸ்கர்-இ-தோய்பா,பாப்பர் கல்ஸா, சர்வதேச சீக்கிய இளைஞர் பேரவை, ஹர்கத் முஜாகிதீன் அமைப்புகள் மற்றும் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடனின்அமைப்பான அல் கைதாவும் தடை செய்யப்படவுள்ளன.
தடை செய்யப்படக்கூடிய அமைப்புகளின் பட்டியலை வெளியிட்டு பேசிய இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர், சார்ல்ஸ் கிளார்க், இந்த பட்டியலில் தடைசெய்யப்பட்டஇயக்கங்கள் வேறு பெயரில் செயல்பட முயற்சிக்கலாம்.
அவற்றின் நடவடிக்கைகளும் கண் காணிக்கப்பட்டு தேவைப்பட்டால் இப்பட்டியலில் சேர்க்கப்படும். பட்டியல் வெளியிடுவதோடு இந்த பட்டியலில் உள்ளஇயக்கங்கள் சூழ்நிலைக்கேற்ப நீக்கப்படவும் கூடும். இத்தகைய இயக்கங்களை தடை செய்வது குறித்த முடிவு அவற்றின் நடவடிக்கைகளை தீவிரமாககண்காணித்த பின் தான் எடுக்கப்பட்டது.
இதனிடையே, இப்பட்டியலில் இடம்பெற்ற அமைப்புகள் பலவற்றின் பிரதிநிதிகள் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சரையும், உள்துறை செயலரையும்சந்தித்து தங்கள் இயக்கங்களின் மீதான தடையை நீக்க கோரின.
தடை செய்யப்பட்ட இயக்கங்களில் பெரும்பாலானவை முஸ்லீம் இயக்கங்களாக இருப்பதால் இங்கிலாந்தின் நடவடிக்கை முஸ்லீம்களை குறிவைத்துஎடுக்கப்படும் நடவடிக்கை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை மறுத்த அமைச்சர் கிளார்க், முஸ்லீம்கள் இங்கிலாந்து சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள கடமைகள் அதிகம். உலகில் அமைதி நிலவுவதற்காகபல்வேறு வகையில் அவர்கள் பங்காற்றி வருகின்றனர். முஸ்லீம்களை இங்கிலாந்து அரசு பெரிதும் மதிக்கிறது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள இயக்கங்கள் மீதான தடை உடனடியாக அமலுக்கு வராது. இந்த பட்டியல் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில்விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகே தடை செய்யும் உத்தரவை உள்துறை செயலர் வெளியிடுவர்.
தடையை எதிர்த்து பாதிக்கப்பட்ட இயக்கங்கள் இங்கிலாந்தின் உள்துறையிடம் முறையீடு செய்யலாம். அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில்,தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் மேல்முறையீட்டு மன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
தடை செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது குற்றமாக கருதப்படுவதோடு அந்த இயக்கங்களுக்காக நிதி வசூல் செய்வதும்குற்றமாகும். தீவிரவாத தடைச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால் அச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பது காவல் துறையினர் கடமை என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications