சொத்துக்களை ஒப்படைத்தது நவாஸ் குடும்பம்
இஸ்லாமாபாத்:
ஆள் கடத்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் குடும்பத்தார், லாகூரில் உள்ள தங்களது 2பங்களா வீடுகளை தனிநபர் சொத்துக் கண்காணிப்புக் குழுவினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, தனிநபர் சொத்துக் கண்காணிப்புக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நவாஸ் ஷெரீப் குடும்பத்தார், ரூ 50 கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை எங்களிடம் அபராதத் தொகையாகக் கொடுத்தனர். மேலும் லாகூரில்தங்களுக்குச் சொந்தமான சொத்து மற்றும் பிற பொருட்களை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளார்கள்.
ஏனெனில் ஊழல், ஆள்கடத்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்களில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப் குடும்பத்தார் அபராதத் தொகையாக லாகூரில் உள்ளதங்களது இரண்டு பெரிய வீடுகளைத் தருவதாகக் கூறியிருந்தார்கள். அதன்படி தற்போது கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பல குற்றங்களில் தொடர்புடைய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. அவர் அடுத்த20 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தர விட்டது.
சில மாதங்களுக்கு முன் நவாஸ் ஷெரீபும், அவரது குடும்பத்தாரும் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்,ஷெரீபின் அசையும், அசையாச் சொத்துக்களை சீல் வைக்கும்படி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications