தமிழர் கட்சி வருத்தம்: சிங்களர்கள் மகிழ்ச்சி
கொழும்பு:
லண்டனில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பது வருத்தமடைய வைக்கிறது என்று இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் கூறியுள்ளன.
புலிகளுக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் சம்பந்தன் கூறுகையில்,
இலங்கையில் அமைதி ஏற்படுத்தி புலிகள், அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்குத்தடை விதித்திருப்பது துர்திர்ஷ்டவசமானது.
இந்தத் தடை எந்நேரத்திலும் நீக்கப்படலாம். தடை விதிக்கப்பட்ட போதிலும் புலிகள், தங்களது அமைதி முயற்சியைக் கைவிட்டு விடக் கூடாது.
இலங்கையில் நார்வே தூதுக் குழுவினரின் உதவியுடன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான ஆயத்தம் நெருங்கி வரும் இந்த நேரத்தில், விடுதலைப் புலிகள்இயக்கத்தை சர்வதேச தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்று இங்கிலாந்துக்கு வலியுறுத்திய பல தமிழர் கட்சிகளில் டி.யூ.எல்.எஃப்.பும்ஒன்று என்றார்.
சிங்கள கட்சிகள் மகிழ்ச்சி:
தேசியவாத சிங்கள உருமாய கட்சி தலைவர் திலக் கருணாரத்னே, புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது எங்களை மகிழ்ச்சியடையவைக்கிறது.
இருப்பினும் லண்டனில் உள்ள புலிகளின் தலைமையகம் மூடும் வரை நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கத் தீர்மானித்துள்ளோம். புலிகளால்எங்களுக்குப் பல விதங்களில் பிரச்சனைகள் ஏற்டலாம் என்றார்.
முன்னதாக, சிங்கள உருமாய கட்சியினர் ஏற்கனவே, லண்டனில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் முன் போராட்டம் நடத்தி, புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிக்கக் கோரி, தூதரக அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தனர்.
இதற்கிடையே, ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத்தடை சட்டத்தை இங்கிலாந்து பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
முன்னதாக, கடந்த மாதம் லண்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, இங்கிலாந்து அரசிடம், புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கவேண்டும். மேலும் அதனால் இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்றார்.
இலங்கை, இந்தியா, அமெரிக்காவுக்குப் பிறகு புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்த நாடுகள் வரிசையில் 4 வதாக இடம் பெற்றுள்ளது இங்கிலாந்துஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications