புலிகள் பலம் இழக்கவில்லை: இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இலங்கையில் புலிகள் தங்களது ஆயுத பலத்தை இழக்கவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரி மைக் டோல்மோரே வெள்ளிக்கிழமைதெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட 21 இயக்கங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

இதற்கு இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளும், புலிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரி மைக் டோல்மோரே, தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தான கருத்தரங்கு ஒன்றில்கலந்து கொண்டு பேசுகையில், சர்வதேச அளவில் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளதுஇங்கிலாந்து. இது பாராட்டுக்குரியது.

இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள், புலிகளுக்குச் செய்யும் நிதியுதவி மற்றும் பிற உதவிகளை நிறுத்தினால் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைமுற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

1980 ம் ஆண்டு முதல் இலங்கையில் தனது நிலையை நன்கு வலுப்படுத்திக் கொண்டுள்ளது புலிகள் இயக்கம். அதற்கு இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் அதிகஅளவு உதவி செய்ததே காரணமாகும். 1986 ல் இலங்கை அரசை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

புலிகள் ஆயுத பலத்தை இழந்து விட்டனர் என்று கூறுவதில் அர்த்தமில்லை. அவர்கள் இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறார்கள்.

இருப்பினும் இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் நிதி திரட்டி தங்களது இயக்கத்துக்கு ஆயுத பலத்தை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் புலிகள்இயக்கத்தினர். இங்கிலாந்தில் வாழும் தமிழர்களின் நிதியுதவியின்றி புலிகளால் தங்களது நிலையை வலுப்படுத்திக் கொள்ள முடியாது.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு, தங்களது இயக்கத்தை எவ்வாறு வலிமைப்படுத்துவது என்பது குறித்து நன்கு தெரியும். அவர் மிகபுத்திசாலித்தனமான வீரர். போர் தந்திரங்களை அறிந்தவர்.

புலிகளுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ள இந்த நேரத்தில், புலிகளின் செயல்கள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கையில் அமைதி ஏற்பட, இலங்கை அரசும், புலிகளும் பேசித்தான் தீர்வு காண வேண்டும்.

இங்கிலாந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வில்லையென்றால் இலங்கையில் ஒரு போதும் அமைதி ஏற்படாது. ஏனெனில் அவர்கள்இங்கிலாந்துக்கு வந்து நிதி வசூல் செய்து கொள்வார்கள் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+