""நடமாடும் செயற்கைக் கால் பொருத்தும் மையம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ஊனற்றோரின் நலன் கருதி, ""நடமாடும் செயற்கைக் கால் பொருத்தும் மையம் ஒன்றை ரூ. 25 லட்சம் செலவில்ரோட்டரி கிளப் தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஊனற்றோரின் நலனுக்காக பல்வேறு சேவைகளில் மத்திய நகர் ரோட்டரி சங்கம், ரோட்டரிஇன்டர்நேஷனல் (யூ.எஸ்.ஏ) ஆகியவை இணைந்து புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.

இந்த திட்டத்தின்படி கால்களை இழந்த, ஊனற்ற ஏழைகளுக்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்படும். இதற்காக ரூ.25 லட்சத்தை இன்டர்நேஷனல் ரோட்டரி சங்கம் அளித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள கால் ஊனற்றோர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குச் செயற்கைக் கால்களை ரோட்டரிசங்கம் பொருத்தும். இதற்கான மருத்துவ செலவு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும்.

ரோட்டரி இன்டர்நேஷனல், செயற்கைக் கால்களை அளிக்கும். கடந்த 1991ம் ஆண்டு முதல் இதுவரை 575பேருக்கு செயற்கைக் கால்கள் இலவசமாகப் பொருத்தப்பட்டுள்ளன.

அடுத்த 3 ஆண்டுகளில் 700 பேருக்கு இந்த செயற்கைக் கால்கள் பொருத்தப்படும். இத் திட்டம் வரும் ஏப்ரல்மாதம் 5ம் தேதி முதல் செயல்படத் துவங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+