தாறுமாறாக ஓடி என்ஜீனியர் உயிரைப் பறித்த லாரி
சென்னை:
லாரி தாறுமாறாக ஓடியதில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜீனியர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சென்னை அம்பத்தூரில் வசித்து வந்தவர் தனியார் நிறுவனமொன்றில் என்ஜீனியராக பணியாற்றி வந்த அசோக் குமார் (23). இவர்கோவில்பட்டி யைச் சேர்ந்தவர். தனது மோட்டார் சைக்கிளில் திருநின்றவூர் அருகேயுள்ள சத்திரம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தார்.
சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி தாறுமாறான வேகத்தில் வந்தது. வந்த வேகத்தில் அசோக் குமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. மோதியும் நிற்காத லாரி, பக்கத்தில் இருந்த பெட்டிக் கடை மீதும் மோதி நின்றது.
இதில் அசோக் குமார் அந்த இடத்திலேயே இறந்தார்.
இதில் அசோக் குமார் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பெட்டிக் க டைக்குள் நின்றிருந்த முருகேஸ்வரி என்றபெண்ணும், சைக்கிளில் சென்று கொண்டிருந்த முருகேசன் என்பவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவம னையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications