சென்னையில் மன்மோகன் சிங்: சோனியா அனுப்பினார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மற்றும் மாநில காங்கிரஸ் த லைவர்களுடன் கூட்டணி தொடர்பாகபேச்சு நடத்துவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் மன் மோகன் சிங் வெள்ளிக்கிழமை கா லை சென்னைவந்தார்.

அதிமுக கூட்டணியில் த.மா.கா. மற்றும் காங்கிரஸைச் சேர்க்க பல்வேறு விதமான முயற்சிகள் நடந்து வருகின்றன.பல்வேறு தலைவர்கள் மூப்பனாருடன் தினசரி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் தெரிந்தயோசனைகளைக் கூறி வருகின்றனர். இருப்பினும் இன்னும் ஒரு தெளிவு கி டைக்கவில்லை.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன் மோகன் சிங்திடீரென வெள்ளிக்கிழமை சென் னை வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் வரவேற்றார்.

பின்னர் நேராக அவர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குப் போய் விட்டார். வெள்ளிக்கிழமை மாலை அவர் பல்வேறுகாங்கிரஸ் த லைவர்களுடன் பேச்சு நடத்துகிறார். மூப்பனா ரையும் அவர் சந்திக்கிறார். கூட்டணி தொடர்பாககாங்கிரஸ் தலைவர் சோனியாவின் செய்தியை மூப்பனாரிடம் சேர்க்க மன் மோகன் சிங் வந்துள்ளதாகக்கூறப்படுகிறது.

இருப்பினும் தனிப்பட்ட முறையாகவே அவர் சென் னை வந்துள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது. 2 நாட்கள் சென்னையில் தங்கியிருப்பார் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+