மொரிஷியஸ் பயணியைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சென்னை வந்த போது காணாமல் போய் விட்டதாகபோலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மொரிஷியஸ் நாட் டைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை தெய்வபிரகாசம் (42). இவர் 30 பேர் அடங்கியமொரிஷியஸ் குழுவினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்தார்.
சென்னைக்கும் இந்தக் குழு ஜனவரி 9ம்- தேதி வந்திருந்தது. வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது, நாராயண பிள்ளை காணாமல் போய் விட்டார்.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications