மூப்பனார் பேட்டி: செய்தி ஒன்றுமில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் கூட்டணி குறித்த பிரச்சனை நீடிக்கும் வரை நீடிக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறினார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக த.மா.கா. தமாஷா தொடர்ந்து வருகிறது. ஒரு முடிவும் எடுக்காமல், தொடர்ந்து தலைவர்கள் கூடிக் கூடிப் பேசி குழப்பிவருகிறார்கள். இன்று தெரிந்து விடும், நாளை தெரிந்து விடும் என்று பத்திரிகையாளர்களும், பொதுமக்களும், அதிமுகவினரும் தினம் இலவு காத்தகிளி போல மூப்பனாரை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தினசரி ஒரு தலைவர் மூப்பனாரை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்கள். கூட்டணி தொடர்பாக மூப்பனார்டெல்லி செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. மாறாக ஜெயந்தி நடராஜன் எம்.பி டெல்லி சென்று சோனியா காந்தியைச்

சந்தித்தார்.அதன் பின்னர் வெள்ளிக்கிழமை ஜெயந்தி நடராஜன் சென்னை திரும்பினார். சென்னை வந்தவுடன் நேராக மூப்பனாரைச் சென்று சந்தித்தர். சுமார் 30நிமிடங்கள் அவருடன் பேசினார். சோனியா தரப்பில் சொல்லப்பட்ட கருத்துக்களை மூப்பனாரிடம் அவர் எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு வீட் டை விட்டு வெளி யே வந்த மூப்பனார் வித்தியாசமான ஒரு பேட்டியை செய்தியாளர்களுக்குக் கொடுத்தார். பெரும்பாலானகேள்விகளுக்கு பதிலே அவர் தரவில்லை. மெதுவாக வெற்றிலையை மென்று கொண்டும், அமைதியாக இருந்தும் பல கேள்விகளுக்கு மெளனம்சாதித்தார். மற்ற கேள்விகளுக்கு ஒரு வரி வினா விடை போல ஆம், இல்லை என்று பதில் கூறினார்.

மூப்பனார் தனது ரத்தினச் சுருக்கப் பேட்டியில் கூறியதாவது (இதில் புதிய விஷயம் ஏதுமில்லை. ஏற்கனேவே அவர் கூறியது தான்):

விரைவில் கூட்டணி குறித்து முடிவு அறிவிப்பேன். 2 நாட்களில் கூட அறிவிக்கலாம். கூட்டணி குறித்து முடிவு அறிவிப்பது தொடர்பாக நீடிக்கும் விவாதங்களைநாடகம் என்று நீங்கள் (செய்தியாளர்கள்) கூறினால், அப்படியே வைத்துக் கொள்ளலாம். இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்றால் நீடிக்கும் வரைநீடிக்கும்.

3-வது அணி அமைப்பது குறித்து நீங்கள் (செய்தியாளர்கள்) வந்தால் முடிவு செய்யலாம் என்றார் மூப்பனார்.

மூப்பனார் பேட்டி யையடுத்து ஜெயந்தி நடராஜ னை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அவர் கூறுகையில், சோனியா காந்தியுடன் நடத்திய பேச்சு குறித்துமூப்பனாரிடம் விளக்கினேன். கூட்டணி குறித்து முடிவு செய்ய காலக் கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. விரைவில் முடிவு தெரியவரும். கூட்டணி அமைவதில்தமிழ் மாநில காங்கிரஸ் எந்த விதத்திலும் தடையாக இல்லை என்றார்.

மொத்தத்தில், த.மா.கா.வின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+