5-ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி துவங்குகிறது. 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.

இதுகுறித்து மாநில மேல்நிலைக் கல்வி தேர்வுத் துறை இயக்குநர் பரமசிவன் கூறு கையில், மொத்தம் 3,95,001மாணவ, மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். 1287 தேர்வு மையங்கள் இதற்காக அ மைக்கப்பட்டுள்ளன.

கேள்வித்தாள்கள் ஏற்கனவே தேர்வு நடக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. 450 மையங்களில்கேள்வித் தாள்கள் வைக்கப்பட்டுள்ளன. கேள்வித்தாள் உள்ள ஒவ்வொரு மையத்திலும் இரண்டுமேற்பார்வையாளர்கள் போடப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் அங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுக ளை கண்காணிப்பதற்காக பறக்கும் ப டைகளும் அ மைக்கப்பட்டுள்ளன. இவர்கள், தேர்வு நடக்கும்மையங்களுக்கு திடீர் எனச் சென்று சோதனையிடுவர்.

இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வழக்கத்தை விட 10 நாட்கள் முன்னதாகவே தெரிய வரும். விடைத் தாள்திருத்தும் பணியில் புதிய முறை கையாளப்படவுள்ள தே இதற்குக் காரணம்.

இப்போது விடைத்தாள் மறு கூட்டலுக்கு மட்டு மே மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இந்தமுறை, தாங்கள் பரிட்சையை எப்படி எழுதியுள் ளோம் என்பதை வி டைத்தாள் திருத்தலுக்கு முன் பே மாணவ,மாணவியர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் மட்டுமே இந்த வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பேப்பர் ஒன்றுக்கு ரூ. 40 செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு வி டைத்தாள்ஒன்றுக்கு ரூ. 400 செலுத்த வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+