For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தான் புத்தர் சிலைகளை பாதுகாக்க இந்தியா தயார்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

Bamiyan Hill Areaஆப்கானிஸ்தானில் பாமியான் பகுதியில் உள்ள 2 புத்தர் சிலைகளை அந்நநாட்டு மதவாத தலிபான் அரசு உடைத்துவிடத்திட்டமிட்டுள்ளதையடுத்து, அந்த சிலைகளையும் பிற மத அடையாள சின்னங்களையும் எங்கள் நாட்டில் வைத்து பாதுகாக்கத்தயார் என இந்தியா அறிவித்துள்ளது.

அந்த சிலைகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்துவிடவும் தயார் என இந்திய அரசு தலிபான் அரசிடம் கூறியுள்ளது.

இந்தச் சிலைகளும், மதச் சின்னங்களும் இஸ்லாமுக்கு விரோதமானவை எனக் கூறிக் கொண்டு தலிபான் இந்தகாட்டுமிராண்டித்தனத்தில் இறங்கியுள்ளது. இங்குள்ள புத்தரின் சிலைகள் 2000 ஆண்டு பழமை வாய்ந்தவை. ஆப்கானின்கலாசார வளத்துக்கு ஒரு சான்றாக இவை விளங்கி வருகின்றன. ஒரு சிலை 175 அடியும் மற்றொரு சிலை 124 அடியும் உயரம்கொண்டவை.

Bamiyan Budhaபாமியான் மலைப் பகுதியில் மலையைக் குடைந்து இந்த சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக மிக காரசாரமான விவாதம் நடந்தது. பல்வேறு கட்சியிரும் தலிபான் அரசுக்குஎதிரான கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இதையடுத்து உறுப்பினர்களுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், இந்தசிலைகளையும், மதச் சின்னங்களையும் இந்தியாவுக்கு எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தச் சிலைகள் ஆப்கன்மக்களின் சொத்துக்கள். தலிபான் அரசின் இந்த சிந்தனையில்லாத செயலை ஐக்கிய சபையும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்தும்என நம்புகிறோம் என்றார்.

ராஜ்யசபைத் துணைத் தலைவரும் இஸ்லாமிய மதத்தைத் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான நஜ்மாஹெப்துல்லா கூறுகையில், தலிபானின் இந்தச் செயல் இஸ்லாமிய மதத்தின் மீது கரைபடியச் செய்துவிடும். பாதுகாப்பது தான்இஸ்லாமிய மதத்தின் குணம். எதையுமே அழிப்பது இஸ்லாமுக்கு விரோதமானது. இந்த சிலைகளை நான் ஆப்கன் சென்றபோதுபார்த்திருக்கிறேன். அவை அழிக்கப்படும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்த சிலைகளை உடைக்கப்பட்டால் நமது வாழ்நாளில் நடந்த மிக மோசமானசம்பவமாக அது இருக்கும் என்றார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. தம்மாவிரியோ பேசுகையில், எனக்கு பேச வார்த்தைகளே வரவில்லை. இந்த சிலைகளை உடைக்கதலிபான் டாங்கிகளை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X