செக் மோசடி: தொழிலதிபருக்கு சிறைத் தண்டனை
கோவை:
திருப்பூரில் 4. 65 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்து மோசடி செய்ததாக தொழிலதிபருக்கு இரண்டு ஆண்டு ஜெயில்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூரில் சாயப்பட்டறை தொழிலதிபர் வருபவர் சக்திவேல் பாண்டியன் (43). கருவம்பாளையத்தில்சாயப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடமிருந்து தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த தவமணி என்ற பாபு (30),கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 3, 34, 499 ரூபாயை கடனாக வாங்கினார்.
இதன் பின்னர் இரண்டாவது தவணையாக 1,30, 464 ரூபாய் வாங்கினார். இந்த பணத்தைத் திருப்பிச் செலுத்த 98ம்ஆண்டு மே மாதம் 3 செக்குகளைக் கொடுத்தார். இந்த செக்குகள் அனைத்தும் வங்கிக் கணக்கில் பணம் இல்லைஎனக் கூறி திரும்பி வந்தன.
இதனையடுத்து மீண்டும் தவமணி பாபு, 2 செக்குகளைக் கொடுத்தார். இந்த செக்குகளும் திரும்பி வந்தன. எனவே,இது குறித்து சக்திவேல் பாண்டியன், போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சக்திவேல் பாண்டியனுக்கு அளிக்க வேண்டிய தொகைக்குப் போலியாக செக்கொடுத்து மோசடி செய்ததற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், மேலும், 2 செக்குகளைக் கொடுத்துமறுபடியும் ஏமாற்றியதற்காக கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். பணத்தை திருப்பிச்செலுத்த தவறினால் , மீண்டும் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு திருப்பூர் நகரில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications