நிலக்கரி ஊழல்: நீதிமன்றத்தில் ஜெ.அப்பீல்
சென்னை:
தன் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மற்றும் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு ஆகியவற்றின் விசாரணையை கீழ்நீதிமன்றங்கள் விசாரிக்க தடை கோருகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ள தகவல்கள்:
தற்போதைய அரசு தன்னை பழி வாங்கும் நடவடிக்கையாக இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு பதிவு செய்துள்ளது. அரசு தரப்பின் நடவடிக்கைகள்சட்டத்தை மீறுவதாக உள்ளதோடு, தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவித்துஅரசியல் ஆதாயம் தேட விழைகிகிறார்.
பல வக்கீல்களை அரசு தரப்பில் வாதாட தினசரி கட்டணத்தில் நியமித்து மக்களின் வரிப்பணத்தை தேவையற்ற வகையில் வீணடிக்கிறது அரசு.
தனக்கு ஆதரவாக இருக்கும், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பதவியிலிருந்தவர்கள் பலரின் மீதான வழக்குகளை கைவிட்டுள்ளதோடு என் மீதும் என்னைசார்ந்திருப்பவர்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு வழக்குகளை தொடுக்கிறார் கருணாநிதி.
மேலும், சாட்சிகள் பலரை துன்புறுத்தி எனக்கு எதிராக வாக்கு மூலங்களை எழுதி வாங்கியுள்ளனர் அரசு தரப்பினர்.
அரசியல் எதிரி என்பதற்காக சட்டத்தை எந்தவொரு குடிமகனையும் துன்புறுத்தக் கூடாது. எனவே, அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையான இத்தகையவழக்குகளை கீழ்நீதி மன்றங்கள் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications