சியாட்டில் நிலநடுக்கத்தில் சேதம் 2 பில்லியன் டாலர்கள்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்:

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்பட்ட சாலைகள், பாலங்கள் ஆகியவற்றைப் பழுது பார்க்கப் பல மாதங்கள் ஆகலாம்.

இதுகுறித்து, சியாட்டில் டகோமா சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ரிக்கேல் கார்சன் கூறியதாவது:

நிலநடுக்கத்தால் விமான நிலையத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கன்ட்ரோல் டவரில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யும் பணிதீவிரமாக நடந்து வருகிறது.

முன்னதாக, புதன்கிழமை 6.8 என்ற ரிக்டர் அளவில் சியாட்டில் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகள், பல மாடிக் கட்டிங்கள், வர்த்தக ஸ்தாபனங்களில்கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுவரை சேத மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேதத்தைக் கணக்கிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நிலநடுக்கத்தால் 368 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேரின் நிலை மிகவும்கவலைக்கிடமாக உள்ளது.

பல தேசிய நெடுஞ்சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+