சேது சமுத்திரத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே பிரதமர் வாஜ்பாய் சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுசெய்வது குறித்து அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த பட்ஜெட்டில்சேது சமுத்திர திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் தமிழக மக்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.
ஏற்கனவே தனது தமிழக சுற்றுப்பயணத்தின் போது, சேது சமுத்திரத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒத்துக்கொண்டார் பிரதமர் வாஜ்பாய்.
ஆனால், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தனது பட்ஜெட்டில் சேது சமுத்திர திட்டத்திற்கு ஒதுக்கவுள்ள நிதி குறித்துஎதுவுமே கூறவில்லை.
இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications