விவசாயிகள் பிரச்சனை: கருணாநிதிக்கு ஜெ. சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் உத்தரவை ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழகவிவசாயிகளை முதல்வர் கருணாநிதி மீண்டும் ஏமாற்றிவிட்டார் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், மின் வாரியங்களை தனியார்மயமாக்கிவிட்டு, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைரத்து செய்யப் போவதாக பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார். இதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கருணாநிதி, தமிழகத்தில் நடந்த அரசுநிகழ்ச்சிகளில் சுற்றிக் கொண்டிருந்தார். விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டதால் தான் வாஜ்பாய் அரசுக்கு கொடுத்த ஆதரவைநான் திரும்பப் பெற்றேன்.

1971ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த இதே கருணாநிதி தான் மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்த போலீசுக்கு உத்தரவிட்டார். அதில் 14 விவசாயிகள் பலியாயினர் என்பதை நினைவூட்டுகிறேன் என்றுஜெயலலிதா கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+