For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பயிற்சி

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லமாபாத்:

காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை இந்தியா மேலும் நீட்டித்திருந்தாலும், காஷ்மீரில்தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இளைஞர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்துபயிற்சி அளித்துத் தான் வருகிறது.

இவர்கள் அனைவரும் 13 வயதிலிருந்து 19வயதுக்குட்பட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை நிறுத்தத்தை இந்தியாஅறிவித்துள்ளது.

ஆனாலும் பாகிஸ்தான் ஜம்மு- காஷ்மீர் பகுதியில் ஜிஹாத் எனப்படும் மதப் போர்நடவடிக்கைக்காக பல இளைஞர்களுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்(பி.ஓ.கே.) பகுதியில் தொடர்ந்து தீவிரவாத பயிற்சி அளித்துக் கொண்டு தான் உள்ளது.

இந்த பயிற்சி முகாமுக்கு காஷ்மீர் விடுதலை போராட்டம் என பாகிஸ்தான்ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் அரசு பெயரிட்டுள்ளது. இங்கு பயிற்சி எடுத்துக்கொள்ளும்முஜாஹுதீன் அமைப்பினர் தங்கள் பெரும்பான்மையான நேரத்தை கடும் குளிரில்திறந்த வெளிகளில் கழிக்கிறார்கள்.

இவர்களுக்கு கை எறி குண்டுகளை எறிவதற்கும், வெடி குண்டுகளை வெடிக்கவைப்பதற்கான பயிற்சியும், ராக்கெட் லான்ச்சர், ரிவால்வர் உள்ளிட்ட பலஆயுதங்களை உபயோகிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர வரை படங்களை பார்த்து இடங்களை அறிந்து கொள்வதற்கான பயிற்சியும்,தகவல் தொடர்பு சாசதனங்களை உபயோகிபப்பதறகான பயிற்சியும்வழங்கப்படுகிறது.

மதம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளும் மனவலிமை பயிற்சிகளும் எப்போதும் போல்வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியாளர்களுக்கு பசி. தாகத்தை தாங்கவும், பல நாட்கள்தொடர்ந்து மலைகளில் ஏறும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தினமும் குரானும்போதிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பல இளைஞர்களும் கிராமப் புறத்திலிருந்துவந்தவர்கள். இவர்கள் ஏழ்மையான குடும்பத்திலிருந்தும் வந்தவர்கள் என்பதும்குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்கள் தினசரி பயிற்சியை வழிபாட்டுக்கு பின்னரேதுவங்குகின்றனர்.

மாலையில் அவர்களுக்கு கடுமையான உடற்பயிற்சியும், ராணுவ பயிற்சியும்அளிக்கப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X