போர்ச்சுக்கல்: மேம்பாலம் இடிந்ததில் 70 பேர் பலி
லிஸ்பன்:
போர்ச்சுக்கல்லில் உள்ள ஒபார்ட்டோவில் உள்ள பாலத்தில் பஸ்சும் இரண்டு கார்களும் சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்ட மக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் பஸ் மற்றும் கார்களில் பயணம் செய்தவர்கள்.
டியூரோ என்ற ஆறு பாயும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கேஸ்டிலோ டி பாய்வா மேம்பாலம் 116 வருடம் பழமை வாய்ந்தது. டியூரோ ஆற்றில் கடந்த சிலநாட்களாகத் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நீர்மட்டத்தின் அளவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மேம்பாலம் இடிந்து விழுந்தது.
அப்போது இந்த மேம்பாலத்தில் 67 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பஸ்சும் எதிரே வந்த இரண்டு கார்களும் மோதிக் கொண்டு ஆற்றில்கவிழ்ந்தன. விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கேஸ்டிலோ டி பாய்வா மேயர் பவுல் டெக்சாரியா கூறுகையில், மேம்பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது என்றும் இதை விரைவில் சரி செய்யவேண்டும் என்று பிரதமர் அன்டோனியோ கட்ரேஸிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்த மேம்பாலத்தில் தினமும் 1,800 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன என்று அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications