நடுத்தெருவில் த.மா.கா
சென்னை:
அரசியலில் நண்பன் அல்லது எதிரி என்று இரண்டே பிரிவு தான். இரண்டுக்கும் நடுவே என்ற பிரிவே கிடையாது.
எனக்கு கருணாநிதியும் நண்பர், ஜெயலலிதாவும் அரசியல் சினேகிதி என்று கூறிக் கொண்டிருந்த மூப்பனாருக்கு இருவருமேசேர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்கள். முதலில் த.மா.காவுக்கு 40 இடம் தருகிறோம் என்று கூறிய கருணாநிதி, மூப்பனார்ஜெயலலிதாடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டு மூப்பனாருக்கு கதவை மூடினார்.
ஆனால், ஜெயலலிதாவோ மூப்பனாருடன் ஒரு பக்கம் பேசிக் கொண்டே அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மூப்பனாருடன்பேச பல தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்த ஜெயலலிதா திடீரென ஹைதராபாத் சென்றார். திரும்பி வந்த கையோடு ராமதாஸைமட்டும் அழைத்துப் பேசினார்.
மூப்பனார், அவரது தோளில் ஏறி அமர்ந்திருக்கும் காங்கிரஸ் இருவருக்குமே எனது கூட்டணியில் இடமில்லை. பா.ம.கட்சியுடன்தான் கூட்டு என்று ராமதாஸை விட்டே அறிவித்துவிட்டு போயஸ் தோட்டத்து கதவை பூட்டிக் கொண்டுவிட்டார்.
யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல், நடு நிலையில் இருந்தால், அ.தி.மு.க, தி.மு.க. இருவருமே நான் அதிக சீட்தருகிறேன் என்று போட்டி போட்டுக் கொண்டு நம்மிடம் வருவார்கள் என எதிர்பார்த்தார் மூப்பனார்.
நடு நிலை வகித்த அவரை நடுரோட்டில் விட்டுவிட்டனர் கருணாநிதியும், ஜெயலலிதாவும்.
இப்போதும் கூட தி.மு.க. வீட்டுக் கதவை ஒரு முறை தட்டிப் பார்க்கலாம் என்பதே ப. சிதம்பரம் போன்ற த.மா.காங்கிரஸ்தலைவர்களின் எண்ணம். இதற்கு ரஜினியும் கூட உதவலாம். சிதம்பரத்தை விட்டே தி.மு.கவுடன் மூப்பனார் பேரம் பேசினாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அப்படி ஒரு நிலை வந்தால், காங்கிரசை த.மா.கா. ஜெயா ஸ்டைலில் தூக்கி எறிய வேண்டியிருக்கும். தி.மு.க. கூட்டணியில்காங்கிரஸ் இடம் பெறுவது இயலாத காரியம்.
தி.மு.க. கதவுகள் திறக்கப்படாவிட்டால், மூன்றாவது அணியை அமைப்பது தவிர த.மா.காவுக்கு வேறு வழியே இல்லை. தி.மு.க.,அ.தி.மு.கவில் இடம் கிடைக்காத காங்கிரஸ், குட்டிக் குட்டிக் கட்சிகள், சாதிக் கட்சிகள் என ஒருவர் விடாமல் எல்லோரும் இந்தக்கூட்டணியில் இடம் பெறுவார்கள்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications