Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹஜ் புனிதப்பயணம் நிறைவடைந்தது

Subscribe to Oneindia Tamil

துபாய்:

சவுதி அரேபியாவில் இந்த வருடம் 2 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு தொழுகை நடத்தினர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தவிர வேறு எந்தவிதமான பெரிய அளவிலான அசம்பாவிதச் சம்பவங்களும்இன்றி ஹஜ் புனிதப் பயணத்தின் போது நடக்கவில்லை.

ஹஜ் புனிதப்பயணம் குறித்து மெக்காவில் உள்ள இந்தியத் தூதர் சையது அக்பருதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

2001 ம் ஆண்டு ஹஜ் தொழுகை மிகவும் சிறப்பாக, அமைதியாக நடந்து முடிந்தது.

இந்தியாவிலிருந்து வந்த ஹஜ் பயணிகளுக்காக இங்குள்ள இந்தியக் கவுன்சில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. மெக்காவில் ஹஜ் புனிதப்பயணம்மேற்கொள்ள வந்த மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படவில்லை.

மெக்கா அருகே ஜமராத்தில் தொழுகை நடத்த பெருங்கூட்டமாக வந்த ஹஜ் பயணிகள் நெரிசலில் சிக்கியதில் 40 க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் இந்தியாவிலிருந்து வந்த பெண்கள்.

இந்த நெரிசலில் சிக்கி காயமடைந்த மேலும் 5 இந்தியர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டது. அவர்கள் இப்போது இந்தியா திரும்பி விட்டனர்.இந்த ஒரு சம்பவத்தைத் தவிர வேறு எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடக்கவில்லை.

இந்த வருடம் இந்தியாவிலிருந்து 1, 20, 000 ஹஜ் பயணிகள் தொழுகை நடத்துவதற்காக சவுதி அரேபியா வந்திருந்தனர். இவர்களில் 71, 500 பேர் மத்தியஹஜ் குழுவினர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 35,000 பேர் தனியார் சுற்றுலா ஏஜன்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

2001 ம் ஆண்டு 160 நாடுகளிலிருந்து 1.36 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்கள் சவுதி அரேபியா வந்திருந்தனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் 96,000 பேர்அதிகமாக வந்திருந்தனர்.

ஹஜ் யாத்திரையில் சவுதி அரேபியாவிலிருந்து 5,00,000 பேரும் பங்கேற்றனர் என்றார்.

சவுதி அரேபியா செய்தி நிறுவனம் ஹஜ் புனிதப்பயணம் குறித்து வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

ஜமராத்தில் தொழுகை முடிந்த பிறகு மக்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர். மார்ச் 5 ம் தேதி கூட்ட நெரிசலில்சிக்கி 13 ஆண்களும், 12 பெண்களும் உயிரிழந்த சம்பவத்தைத் தவிர வேறு எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடக்கவில்லை. இதில் மேலும் பலர்உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நெரிசலில் சிக்கி காயமடைந்த 35 நாடுகளைச் சேர்ந்த 179 ஹஜ் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் பத்திரமாக அவர்களது சொந்தஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

இவ்வாறு சவுதி அரேபியா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+