லண்டனில் தமிழ் அகதிகளுக்கு புதிய பிரச்சனை
லண்டன்:
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால், இலங்கையிலிருந்து இங்கிலாந்தில் தஞ்சம் புகும் தமிழர்களின் எண்ணிக்கையும்குறையும் என்று தெரிகிறது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருவதால் அப்பகுதியில் வாழும்மக்கள் அகதிகளாக இங்கிலாந்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது, இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அகதிகளாகச் செல்லும் மக்களின்எண்ணிக்கை மிகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து குடியேற்றத்துறை அதிகாரி கூறுகையில், இங்கிலாந்தில் குடியேற வரும் இலங்கை அகதிகளுக்கு இனிமேல் இடம் கிடைப்பதுவெகு அரிது. இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றார்.
இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
1989ம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டு வரை 19,740 பேர் இலங்கையிலிருந்து, இங்கிலாந்துக்குக் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள்.
1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து 5,370 பேர் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அகதிகளாகத் தங்கியுள்ளனர். 1998ம் ஆண்டு 2,100 பேர்மட்டுமே இங்கிலாந்துக்குக் குடியேறினர்.
1998ம் ஆண்டை விட 1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது.
1989ல் 800 பேரும், 1990ல் 840 பேரும், 1991ம் ஆண்டு 600 பேரும், 1992ல் 1000 பேரும், 1993ல் 1940 பேரும், 1994ல் 1860அகதிகளும், 1995ல் 1370 பேரும், 1996ல் 2180 பேரும், 1997ல் 1620 பேரும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குக் குடியேறினர்.
தற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதால், இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கையும் குறையும்.இதனால் இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்து வந்த தமிழர்களின் எண்ணிக்கையும் குறையும்.
மேலும் இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்து வந்தார்கள். லண்டனில் கடந்த வருடம்விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் 10, 000 புலிகள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் என்றார்.
புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இனிமேல் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழர்கள் இங்கிலாந்து எளிதில் செல்ல முடியாது என்றும்,புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டி விட முடியாது என்றும் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications