மூப்பனாரின் "சர்ப்ரைஸ் விசிட்
சென்னை:
நீ........ண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வியாழக்கிழமைஆலோசனை நடத்த வந்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம்ஏற்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சமீபகாலமாக சத்தியமூர்த்தி பவன் பக்கம் தலைவைப்பத கூட இல்லை. வீடு உள்ள ஆழ்வார்ப்பேட்டையில்தான் தலைவர்கள்,தொண்டர்கள், பத்திரிகையாளர்களுடன் அவர் தேர்தல் கூட்டணிகுறித்து பேசிவருகிறார்.
இதனால் சத்தியமூர்த்தி பவன் வெறிச் சோடிக் கிடந்தது. இந் நிலையில்,வியாழக்கிழமை தனது வீட்டில் குழுமியிருந்த பத்திரிகையாளர்களை கூட்டணிதொடர்பான முடிவு அறிவிக்கவிருக்கிறேன். எனவே அனைவரும் சத்தியமூர்த்திபவனுக்குச் செல்லுங்கள் என்றார்.
இதையடுத்து அனைவரும் அங்கு விரைந்தனர்.
சத்தியமூர்த்தி பவனுக்கு 15 நாட்கள் கழித்து காலடி எடுத்து வைத்தார் மூப்பனார்.தலைவரை அங்கு திடீரென பார்த்த தொண்டர்கள் பரவசமடைந்தனர். பெரும்கோஷத்துடன் வரவேற்றனர். சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த மூப்பனார் நேராக உள்ளேசென்று தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனையில் ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணன், என்.எஸ்.வி.சித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்குப் பின் வெளியே வந்த மூப்பனாரை பத்திரிகையாளர்கள் ஆவலுடன்சூழ்ந்தனர். ஆனால் வழக்கம் போல எதுவும் பேசாமல், அமைதியாக சென்று விட்டார்மூப்பனார். எனவே, வழக்கம் போல எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றுபத்திரிகையாளர்கள் புரிந்து கொண்டனர் (வேறு வழி?).
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications