பா.ஜ.க.வில் இணைய வாழப்பாடி திட்டம்
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு, பாரதிய ஜனதாக் கட்சியுடன் சேர வாழப்பாடி ராமமூர்த்தி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் தனிக்கட்சி நடத்துவதை விட பா.ஜ.க.வில் சேர்ந்தால் வாழப்பாடி ராமமூர்த்திக்கு உயர்ப்பதவி தரப்படும் என்று பா.ஜ.க மூத்த தலைவர்ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்.
பா.ஜ.க வில் சேர்ந்தால் திருச்சி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் வாழப்பாடி ராமமூர்த்தியிடம் கூறியதாகத்தெரிகிறது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானவர் ரங்கராஜன் குமாரமங்கலம். பா.ஜ.கஅமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருந்த அவர் மரணமடைந்து விட்டதால் அந்தத் தொகுதியில் வாழப்பாடி ராமமூர்த்திக்கு திருச்சிநாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
பா.ஜ.க. வில் சேர்வது மட்டுமின்றி திருச்சி தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைப்பதால் இதை வாழப்பாடி ராமமூர்த்தி ஏற்றுக் கொள்வார்என்று தெரிகிறது.
மேலும் கடந்த சில தினங்களாக வாழப்பாடி ராமமூர்த்தி இதுகுறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசித்து வருவதாகவும், திருச்சி நாடாளுமன்றத்தொகுதியில், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் செல்வாக்கால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்றும் இவர் நம்புவதாகவும் தெரிகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications