திருவிழாவில் சாதிச் சண்டை
கரூர்:
கரூர் அருகே நடந்த கோஷ்டி மோதலில் 2 பஸ்கள் சிறை வைக்கப்பட்டன. 5 பேர்கைது செய்யப்பட்டனர்.
கரூர் அருகே உள்ள கடவூரில் அருணகிரிநாதர் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்குவந்திருந்த இரண்டு சமுதாயத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
திருவிழாவின்போது, ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் ராட்சத ராட்டினத்தில் ஏறி ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருந்தனர். இதனைக் கண்ட மற்றொரு சமூகத்தினர் அவர்களைகண்டித்ததால் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. பின்னர் கோஷ்டி பூசலாக மாறி மோதிக்கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய 5 பேரைக்கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, ஒரு சமுதாயத்தினர் பஸ்களை சிறை வைத்தனர்.
விழாவையொட்டி விடப்பட்டிருந்த இரண்டு பஸ்கள் மற்றும் ஒரு மினி பஸ் சிறைவைக்கப்பட்டன.
எனவே, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில்ஈடுபட்டு பஸ்களை மீட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கஅங்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications