சென்னை அருகே கலவரம்: 6 பேர் காயம்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் புன்னப்பாக்கம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட 6 பேர்காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வெண்மணிக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்திக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெண்மணியின் உறவினர் ஒருவர் இறந்தார். அவருக்கு வெண்மணி மற்றும் அவரது உறவினர்கள் மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது வெண்மதியின் ஆட்களுக்கும், சுந்தரமூர்த்தியின் ஆட்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதில் 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்தகலவரத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications