மூப்பனாரை சந்தித்தார் சோ: அ.தி.மு.கவுடன் கூட்டணி நிச்சயம்
சென் னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தனது கூட்டணி குறித்த குழப்பத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் முடிந்து விட்டது.
கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களதுகட்சியின் முடிவைத் தெரிவிக்கவுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் இழுபறி ஆலோசனைகளால் தேர்தல் கூட்டணி குறித்து குழப்பம்நிலவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு யோசனைகள் மற்றும் விவாதங்களுக்கு இப்போது ஒரு முடிவு ஏற்படும்நிலை உருவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுடன் மூப்பனார் தனது வீட்டில் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன், என்.எஸ்.வி.சித்தன்,சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல இரண்டாம் மட்டத் த லைவர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் இவர்கள் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்துகின்றனர். அதன் பிறகு கூட்டணி குறித்த முடிவை இருகட்சித் த லைவர்களும் சேர்ந்து வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
இந்தப் பேச்சுவார்த் தை குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன்செய்தியாளர்களிடம் கூறு கையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முடிவு எடுக்கும் அதிகாரம் மூப்பனாருக்குவழங்கப்பட்டுள்ளது. அவரே கூட்டணி தொடர்பான இறுதி முடிவை எடுத்து அறிவிப்பார் என்றார்.
சோ மீண்டும் சந்திப்பு:
இதற்கிடையே, துக்ளக் பத்திரி கையாசிரியர் சோ மீண்டும் மூப்பனாரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.அரை மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டணி தொடர்பாக சில தகவல்களை மூப்பனாரிடம் சோ தெரிவித்தார்.
அதன் பிறகே கூட்டணி குறித்து மூப்பனார் இறுதி முடிவுக்கு வந்தார் என்று த.மா.கா. வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications