தர்மபுரிக்கு புதிய நீதிமன்றம்
சென்னை:
தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்க முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தர்மபுரியில் கூடுதல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்கப்படும். இந்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு செயல்படத்தொடங்கும் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர், தர்மபுரியில் கூடுதல் முதன்மைமாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் ஏற்கனவே மனுக் கொடுத்திருந்தனர்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றம் கூறுகையில், கிருஷ்ணகிரியில் செயல்படும் நீதி மன்றத்தை தர்மபுரிக்கு மாற்றும்படி தமிழக அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது.
இதற்கிடையே, கிருஷணகிரியில் செயல்பட்டு வரும் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை தர்மபுரிக்கு மாற்றுவதை விட, தர்மபுரியில் தனியாகமாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications