அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் தேசிய கட்சி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தமிழ் தேசியக் கட்சி, அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெறும் என தேசியக் கட்சியின் தலைவர் ஆடிட்டர் பாலசுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் சார்பாகத் தொடங்கப்பட்டது தமிழ் தேசியக் கட்சி. தேர்தலுக்கு முன்னதாக உதயமான இக்கட்சிக்கு, கோவை,ஈரோடு, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பரவலான ஆதரவு இருந்து வருகிறது.

இது குறித்து தமிழ்தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றிற்கும் ஆடிட்டர் பாலசுப்ரமணியம் ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் விபரம்வருமாறு:

அ.தி.மு.க தலைமையில் மதச்சார்ப்ற்ற அணி அமைந்துள்ளது. இந்த அணியில் இடம் பெற தமிழ் தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க அணித் தலைவர் ஜெயலலிதாவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். அவரது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்பதில்எங்களுக்குச் சாதகமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மும்முரமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. எனவே, இந்தபேச்சுவார்த்தை முடிந்ததும் ஜெயலலிதா எங்களையும் கவனிப்பார்.

தமிழ் தேசியக் கட்சிக்குச் சாதகமான 20 தொகுதிகளைக் கண்டறிந்துள்ளோம். திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில்இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க அணியில் இக் கட்சி இடம் பெறவில்லை என்றால், தனித்து நின்று தேர்தலைச் சந்திக்கத் தயாராகஉள்ளோம் என்றார் பாலசுப்ரமணியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+