முல்லைவேந்தன் ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவு
சென்னை:
இந்து அறநிலையத்துறை அதிகாரியை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய தமிழக அமைச்சர் முல்லை வேந்தனை ராஜினாமா செய்யும்படி தமிழக முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு அறநிலையத்துறையினர்ஏற்பாடு செய்திருந்தனர்.
அறநிலையத்துறை அதிகாரி அன்புமணி, கோவில் நிலத்தை செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தனுக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க மறுத்தார்.
மேலும் டெண்டர் மூலமே குத்தகைதாரர் முடிவு செய்யப்படுவர் என கூறிய அந்த அதிகாரியை அமைச்சரின் ஆட்கள் "சரியாக கவனித்து"விட்டனர்.
அமைச்சருடைய ஆட்களின் சித்ரவதை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற அதிகாரியை கலெக்டரின் உத்தரவின்பேரில் போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தொடர்ந்து, அமைச்சரின் முன்னிலையில் நடைபெற்றஇச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர். சி.பி.சி.ஐ.டி.யின் அறிக்கைவியாழக்கிழமை காலை முதல்வரிடம் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், அதிகாரியின் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யுமாறுஅமைச்சர் முல்லைவேந்தனுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.
அற நிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஏலம் விடும் பிரச்சனையில் தலையிட்டதற்கு பொறுப்பேற்றுராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளார் முதல்வர்.
வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட உத்தரவு அமைச்சரின் பி.ஆர்.ஓ மூலம் கிருஷ்ணகிரியில் இருந்தஅமைச்சருக்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த சமத்துவபுரங்கள் திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு அரசு விழாக்களை தவிர்க்க முடியாதகாரணங்களுக்காக வேறு தேதிக்கு ஒத்தி வைப்பதாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications