பூமியில் விழப் போகிறது மிர் விண்கலம்
சுவா:
ரஷியாவின் மிர்விண்கலம் தென்பசிபிக் நாடுகளை தாக்காமல் கடல்பகுதியில் மட்டுமே விழும் என ரஷியாதெரிவித்துள்ளது.
விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் மிர் விண்கலத்தை நிர்வகிக்க போதுமான நிதி வசதி இல்லை என்பதால்அதனை அழித்து விட ரஷியா முடிவு செய்துள்ளது.
விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் இந்த விண்கலம் காற்று மண்டலத்தில் ஏற்படும் உராய்வு காரணமாகசிதைந்து விடும். இந்த உடைந்த பாகங்கள் பூமியின் தென்பசிபிக் கடல் பகுதியில் நியூஸிலாந்திற்கு கிழக்கே 3000கி.மீ தொலைவில் வந்து விழும்.
இப்பகுதியில் உள்ள பல்வேறு தீவுகளில் மர வீடுகளே இருப்பதால் விண்கலத்தின் பாகங்கள் தங்கள் நாடுகளைதாக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க கோருகின்றன தென்பசிபிக் கடல்பகுதி நாடுகளின் கூட்டமைப்பு.
விண்கலத்தின் பாகங்கள் கடல் பகுதியில் மட்டுமே விழும் என ரஷியா கூறியுள்ள போதிலும், தீவுப்பகுதியில்விழுந்து சேதம் ஏற்பட்டால் நிதியுதவி அளிக்கும் பொருட்டு 200 மில்லியன் டாலர்களுக்கு இன்சூரன்ஸ்எடுத்துள்ளது.
தென்பசிபிக் நாடுகளின் கூட்டமைப்பின் தற்காலிக பொதுச்செயலாளரான அயோசேவா மயாவா கூறும் போது,விண்கலம் பூமியை அடையும் போது தென் பசிபிக் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்கக்கூடாது.
எனவே, விண்கலம் பூமியை அடையும் நாள், பூமிக்கு வரும் பாதை போன்ற பல தகவல்கள் ரஷியாவிடம்கேட்கப்பட்டுள்ளன. அதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் எனதெரிவித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications