தி.மு.க. கூட்டணி: பா.ஜ.கவுக்கு 23 இடங்கள், 1 எம்.பி. தொகுதி
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதாக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது போக திருச்சி எம்.பி இடைத்தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. குழுவினரும், திமுக குழுவினரும்வெள்ளிக்கிழமை காலை தான் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில்நிருபர்களிடம் பேசிய திமுக குழுத் தலைவர் ஆர்க்காடு வீராசாமி, இன்னும் 4-5நாட்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார்.
ஆனால், ஆர்க்காடு வீராசாமி இப்படிக் கூறிய சில மணி நேரத்திலேயே இருகட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு முடிந்து, உடன்பாடும் கையெழுத்திடப்பட்டுவிட்டது.
காலையில் நடந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தையடுத்து மாலையில் திமுகதலைவரும், முதல்வருமான கருணாநிதி, மாநில பா.ஜ.க. தலைவர் கிருபாநிதியுடன்பேச்சு நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி தெரிவித்ததாவது:
சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிடுடம்.தொகுதிகள் எவை என்பது பின்னர் பேசி முடிவு செய்யப்படும்.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் நானும், கிருபாநிதியும் கையெழுத்திட்டுள்ளோம்.
பாண்டிச்சேரி சட்டசபைத் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் அவர்கள்தான் (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்கள்.எனவே அந்தத் தொகுதி அவர்களுக்குத்தான் சொந்தம்.
தொகுதிப் பங்கீடு எல்லாம் முடிந்த பிறகு தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள்நடைபெறும். அதை அடிப்படையாக வைத்து பிரசாரம் தீர்மானிக்கப்படும்.
தமிழகத்தில் பிரசாரம் செய்ய பிரதமர் வாஜ்பாய் வருவார் என்றார் கருணாநிதி.
கிருபாநிதி கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே வர வேண்டும்என்பதை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம்.எங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடிய தொகுதிகளை இப்போது பெற்றுள்ளோம்என்றார்.
முன்னதாக 62 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications