த.மா.கா.வில் அதிருப்தி: எம்.எல்.ஏ. விலகல்
சென்னை:
அதிமுகவுடன், தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. அக்கட்சியின் சென்னைஎம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகி விட்டார்.
அதிமுகவுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வெள்ளிக்கிழமைகூட்டணி தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதை கட்சித் தலைவர் மூப்பனார்வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆரம்பம் முதலே த.மா.கா.வில் சிலர் அதிமுக கூட்டணிக்கு எதிராக இருப்பதாகக்கூறப்பட்டது. ஆனால் அதை த.மா.கா தலைமை மறுத்து வந்தது. இந்த நிலையில்,த.மா.கா.வின் சென்னை வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆரூண் கட்சியிலிருந்துவிலகியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அவர் தனது ஐக்கியஜமாத் அமைப்புடன் திமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், த.மா.கா தோன்றியதற்கானநோக்கத்தை மறந்து விட்டார்கள். தன்மானத்தை இழந்து குறைந்த தொகுதிகளுடன்திருப்திப்பட்டுள்ளார்கள். மேலும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இடம் மட்டுமேஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அகில இந்திய அளவிலான முஸ்லீம் லீக்கட்சிக்கு ஒரு இடம் என்பது கேவலமானது.
எனது விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் மூப்பனாருக்கு அனுப்பியுள்ளேன்.பாரம்பரியம் மிக்க அரசியல் தலைவரான மூப்பனாரை விட்டு விலகி வருவது மனவருத்தத்தைத் தந்துள்ளது. மூப்பனாரால் மதச்சர்பற்ற அணி (அதிமுக அணி) என்றுகூறப்படுபவர்கள் கடந்த காலத்தில் பாரதீய ஜனதாக் கட்சியினர் ஆட்சிக்கு வரக்காரணமாக இருந்தவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
திமுக கூட்டணியில் எனக்கு, அப்துல் லத்தீபுக்கு தந்தது போல மரியாதை தருவதாகமுதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்திற்கும்,திமுகவிற்கும் இடையிலான நீண்ட நெடிய உறவு வலுப்படுகிறது என்றார் ஆரூண்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications