தி.மு.க கூட்டணிக்கு வருகிறது புதிய நீதிக் கட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி திமுக கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

சமீபத்தில் உதித்த புதிய கட்சிதான் புதிய நீதிக் கட்சி. முதலியார்கள், பிள்ளைமார்கள் எனப்படும் வெள்ளாளர்கள் ஆகிய ஜாதியினரை நம்பித்துவக்கப்பட்டுள்ளது இந்தக் கட்சி.

புதிய நீதிக் கட்சி தலைமையில் 3-வது அணி அமைப்பதற்கான முயற்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இக்கட்சி தலைமையில் ஏற்கனவே ஒருகூட்டணி உள்ளது. இதில் மக்கள் தமிழ் தேசக் கட்சி, புரட்சித்தலைவர் அ.தி.மு.க (எஸ்.டி.எஸ். ராஜாராம் உள்ளிட்டோர் அமைத்த கட்சி) ஆகியவைஉள்ளன.

மூப்பனாரை தங்களது அணிக்கு இழுக்க புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பிரம்மபிரயத்தனம் செய்து பார்த்தார். ஆனால் மூப்பனார் அசையவில்லை.பேசாமல் அ.தி.மு.கவிற்குப் போய் விட்டார். இந்த நிலையில் 3-வது அணி ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

இந்தச் சூழ்நிலையில், புதிய நீதிக் கட்சியை திமுக அணிக்கு இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான முயற்சியில் சட்டசபை சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

பழனிவேல்ராஜன், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியில் சென்னையைச் சேர்ந்த பிள்ளைமார் சமூகத்தைச்சேர்ந்த ஒரு கண் டாக்டரும் அடக்கம். இவர்களது முயற்சி பலிக்கும் என்றே கூறப்படுகிறது. காரணம், தனியாக தேர்தலில் போட்டியிட்டால்டெபாசிட் கூட தேறாது என்பதை ஏ.சி.சண்முகம் உணர்ந்து வைத்துள்ளதால், திமுக கூட்டணிக்குப் போய் விடலாம் என்ற முடிவில் இருப்பதாகத்தெரிகிறது.

முதல்வர் கருணாநிதி தற்போது வெளியூர் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் சென்னை திரும்பியவுடன் புதிய நீதிக் கட்சியுடன் கூட்டணி தொடர்பான அறிவிப்புவெளியாகலாம். கூடவே மக்கள் தமிழ் தேசம் திமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+