மூப்பனாருக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம்
சென்னை:
அ.தி.மு.க.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதற்கு அக்கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1996-ம் ஆண்டு த.மா.கா. உருவானபோது அதற்குக் காரணமானவர்களில் நானும் ஒருவன். வரவிருக்கும்சட்டசபைத் தேர்தல் தொடர்பாக த.மா.கா. முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு முன் என்னைகலந்து ஆலோசிக்கவில்லை, நான் விடுத்த வேண்டுகோளும் ஏற்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக த.மா.கா.விற்காக உழைத்த தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நான்கடமைப்பட்டுள்ளேன். த.மா.கா. தொண்டன் என்றாவது தனது கட்சி ஆட்சிக்கு வரும் என்ற கனவில் இருப்பவன்.த.மா.காவின் வாக்காளர்கள் உழைப்பாளர்கள், தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், சுய தொழில்செய்பவர்கள், படித்தவர்கள், குடும்பத் தலைவிகள். அவர்கள் 21-ம் நூற்றாண்டு வாக்காளர்கள்.
இப்போது எனக்குள் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எனது கடமையைச் சரியாகச் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அதை எப்படிச் செய்யப் போகிறேன் என்றும் யோசித்துக் கொண்டுள்ளேன்.
96-ல், தமாகாவுக்கும், அதன் தொண்டர்களுக்கும் இடையே ஒரு பந்தத்தை ஏற்படுத்த எங்களால் முடிந்தது.ஆனால் அந்தப் பிணைப்பு இப்போது அறுந்து விட்டதோ என்று நான் கவலைப்படுகிறேன்.
அரசியல் என்பது நல்லாட்சி அமைக்க உதவும் ஒரு கருவி என்றே நான் எண்ணுகிறேன். ஒரு ஆட்சிக்கு தலைமைதாங்கப் போவது யார், அந்த ஆட்சியில் இருக்கப் போவது யார், யார், அந்த ஆட்சியின் குறைந்த பட்ச திட்டம்என்ன, வழிகாட்டும் நெறிமுறையை அது ஏற்றுக் கொண்டுள்ளதா என்பதை வைத்துத்தான் ஒரு ஆட்சிநல்லாட்சியா என்பதைக் கூற முடியும்.
இப்போது, 30 சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு, பிரதிபலனாக, ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் ஆட்சிஅமைய த.மா.கா. உதவி செய்யப் போவதாக ஏற்பாடு அமைந்துள்ளது. இதை என்னால் ஏற்க முடியவில்லை.இந்த ஏற்பாட்டின் மூலம் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இந்த ஏற்பாட்டை த.மா.கா. தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், எனக்கு 1996-ம் ஆண்டுதான் நினைவுக்கு வந்தது. அந்த சோதனையானநேரத்தில் இறைவனும், மனசாட்சியும் எங்களுக்குத் துணையாக இருந்தார்கள். இப்போதும் அதே இறைவனும்,மனசாட்சியும் த.மா.கா. தலைமைக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றுகூறியுள்ளார் ப.சிதம்பரம்.
பா.ஜ.க.வில் சேருகிறார்?:
இதற்கிடையே, ப.சிதம்பரம் பாரதீய ஜனதாக் கட்சியில் சேரலாம் என்று த.மா.கா. வட்டாரத்திலும், பா.ஜ.க.வட்டாரத்திலும் பேச்சு அடிபடுகிறது. த.மா.கா.வில் சமீப காலமாகவே ப.சிதம்பரத்திற்கும், மூப்பனாருக்கும்இடையே ஜெ. வுடனான கூட்டணி தொடர்பாக மனக் கசப்பு இருந்து வந்தது.
தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிலுமே ப.சிதம்பரம் கலந்து கொள்வதில்லை. கட்சித்தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று மட்டுமே அவர் கூறி வந்தார். இந்த நிலையில்,த.மாகா.,அ.தி.மு.க கூட்டணியை அவர் விமர்சித்துள்ளார். அதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
தற்போது, ப.சிதம்பரம் த.மா.காவில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர் பாரதீயஜனதாக் கட்சியில் சேரும் வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. ரங்கராஜன் குமாரமங்கலம் போல தேர்தல் நேரத்தில்பா.ஜ.கவில் சேர அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அப்படிச் சேர்ந்தால், திருச்சி எம்.பி. இடைத் தேர்தலில்அவர் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications