பெண்கள் படிக்க சேவகி சின்னப்பிள்ளை கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை:

ஆண்களுக்கு நிகராக சம உரிமை பெற பெண்கள் படிக்க வேண்டும், சிறுக சிறுக சேமித்து பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என பிரதமர் மற்றும்முதல்வரிடம் விருது பெற்ற களஞ்சியம் மகளிர் குழுவின் சமூக சேவகி சின்னப்பிள்ளை பேசினார்.

கோவை குழந்தைத் தொழில் ஒழிப்பு ஆதரவு இயக்கம், சர்வதேச தொழிலாளர் நல அமைப்பும் இணைந்து திருப்பூரில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கைநடத்தியது. இந்த மாநாட்டில் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சின்னப் பிள்ளை பேசியதாவது:

என்னை என் பெற்றோர்கள் படிக்க வைக்கவில்லை. வறுமை காரணமாக நானும் என் பிள்ளைகளைப் படிக்க வைக்கவில்லை. நான் ஓரளவுபடித்திருந்தால் ஏழை எளிய மக்களுக்கு முன்னுதரணமாக இருந்து ஏதாவது ஒன்றை சாதித்துக் காட்டியிருப்பேன். இப்போது படிக்காதது குறையாகஇருக்கிறது.

பணம் கிடைக்கிறது என்பதற்காக பிள்ளைகளை நம்மோடு காடுகளில் பாடுபட கூட்டிச் செல்லக் கூடாது. ஒரு வேளை சாப்பாடு கிடைத்தாலும்பரவாயில்லை, பிள்ளைகளை நாம் படிக்க வைக்க வேண்டும். சிறுக, சிறுக சேமித்து பிள்ளைகளைப் படிக்க வைத்தால், எத்தனையோ பெரிய வேலைக்குச்செல்ல வாய்ப்பு ஏற்படும்.

இப்போது எத்தனையோ பொறுப்புகளுக்கு பெண்கள் முன்னேறியுள்ளனர். பெண்கள் படித்தவர்களாக இருந்தால், ஆண்களுக்குச் சம உரிமை பெற்றிருக்கமுடியும். படிக்காதவர்களாக இருப்பவர்களை எத்தனையோ பேர் ஏமாற்றியுள்ளனர். படித்திருந்தால் யாரும் ஏமாற்ற முடியாது. நாம் தெளிவாகவும்தைரியமாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார் சின்னப் பிள்ளை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+