பேட் மிட்டன்: சாம்பியன் ஆனார் கோபிசந்த்
Subscribe to Oneindia Tamil
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட் மிட்டன் போட்டியில் இந்திய வீரர் கோபிசந்த், சீன வீரர் சென் ஹாங்கை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
பர்மிங்காமில் ஞாயிற்றுக்கிழமை ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் சாம்பியன் போட்டி நடந்தது. இதன் இறுதிப் போட்டியில்கோபிசந்த்தும், சீன வீரர் ஹாங்கும் மோதினார்கள்.
இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கோபிசந்த் 15-12, 15-6 என்ற செட் கணக்கில் ஹாங்கைத் தோற்கடித்து சாம்பியன்பட்டத்தைக் கைப்பற்றினார்.
கோபிசந்த் இந்தப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் ஆவார். அவருக்கு வயது 27. இதற்கு முன்பு 1980 ம்ஆண்டில் இந்திய வீரர் பிரகாஷ் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications