கேரளா: பஸ், கார் மோதி தீப்பிடித்ததில் 40 பேர் சாவு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போகிப்பரம்பு பகுதியில் பயணிகள் சென்ற பஸ், கார் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்சில் 60 பேர் பயணம் செய்தனர். இந்த பஸ் போகிப்பரம்பு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்தகார் மீது மோதியது.
இதையடுத்து, பஸ்சிலுள்ள டீசல் டேங்கர் கசிந்து பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் பயணம் செய்த 40 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்தனர்.
விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் மனிதச் சடலங்களாக மிகவும் கோரமாகக் காட்சியளித்தன.
பஸ்சில் பயணம் செய்த சில பயணிகள் பஸ்சின் ஜன்னல் வழியே குதித்து தப்பித்து ஓடினர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications