தலித்துக்கள் படுகொலையைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

கர்நாடக மாநிலம் கம்பலபள்ளி கிராமத்தில் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட7 தலித்துக்களுக்கு முதலாமாண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் லண்டனில் உள்ளதலித் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை அங்குள்ள இந்திய தூதரகத்தின் முன் கூடிமெளன பிரார்த்தனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இதுகுறித்து தலித் ஆதரவாளர்கள் சங்கத் தலைவர் டேவிட் ஹாஸ்லம் கூறுகையில்,

கர்நாடக மாநிலம் கம்பலபள்ளி கிராமத்தில் தலித்துக்கள் படுகொலை செய்யப்பட்டசம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். ஜாதி கலவரத்தில் தலித்துக்கள் கொலைசெய்யப்பட்ட இதே போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறக் கூடாது.

கம்பலஹள்ளி கிராமத்தில் தலித் இன மக்களுக்கான உரிமைகள், நியாயங்கள்கிடைப்பதில்லை. அங்கு காலங்காலமாக தலித் இன மக்களுக்கு கொடுமைகள் நடந்துவருகிறது.

கடந்த வருடம் இதே நாளில் தலித் இன மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு அங்குவாழ்ந்து வந்த பிற தலித் மக்கள் கிராமத்தைக் காலி செய்து கொண்டு வேறுஇடங்களுக்குச் சென்று விட்டனர். அவர்கள் இன்னும் தங்கள் சொந்த ஊருக்குதிரும்பவில்லை என்றார்.

முன்னதாக, தலித்துக்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள்நலத்துறை எம்.பி.ஜெர்மி கார்பியன், ஜான் மேக் டோனல், பெஷாவரின் முன்னள்பிஷப் ஆங்கலிகான் மிஷனரி தலைமை பிஷப் மனோ ருமெல்ஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+