புலிகள் இயக்கத்தை விட்டு பலர் விலகல்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகளின் முக்கியக் கோரிக்கையான தனி ஈழம் கோரிக்கை சாத்தியமில்லை என்று உணரத் தொடங்கி விட்டதால், அந்தஇயக்கத்தை விட்டு பலர் வெளியேறுவது அதிகரித்து வருகிறது என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

மேலும் கடந்த 15 நாட்களில் புலிகள் இயக்கத்தை விட்டு அதிக அளவிலானவர்கள் வெளியேறியுள்ளனர் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

இங்கிலாந்து அரசு, சமீபத்தில் புலிகள் இயக்கத்தை சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவித்தது மட்டுமின்றி புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்தில்தடையும் விதித்தது.

இந்த நிலையில் தங்களது தனி ஈழம் என்ற கனவு பலிக்காது என்று புலிகள் இயக்கத்தில் உள்ளவர்கள் உணரத் துவங்கி விட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ளபுலிகள் இயக்கத்தில் தங்கள் குழந்தைகளை, உறவினர்களை சேர்த்து விட்டவர்கள் எப்படியாவது அவர்களை மீட்க முயன்று வருகின்றனர்.

மேலும், நிர்பந்தத்தினாலோ அல்லது தன்னார்வத்துடனோ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், அந்த இயக்கத்தை விட்டு வெளியேறமுயற்சித்து வருகின்றனர்.

கடந்த வாரம் யாழ்பாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதர் ஆஷ்லே கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு இலங்கையிலேயே தனி ஈழம்கொடுக்க இலங்கை அரசு ஒரு போதும் சம்மதிக்காது. மேலும் தனி ஈழம் கொடுக்க சர்வதேச நாடுகளும் சம்மதிக்காது என்று கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த புலிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் புலிகள் மேற்கொண்டு வருவது, தொடர்ந்து சண்டை நிறுத்தத்தை நீட்டித்துவருவது போன்ற செயல்கள், புலிகளை அவ்வியக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற வைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+