மதுரை: சைக்கிள்கள் மேல் பஸ் மோதி 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள்கள் மேல் அரசுப் பேருந்து மோதியதில் நான்கு தொழிலாளர்கள் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பெயர் அய்யாவு (45), எம்.ராஜா (35), பன்னீர் (18) மற்றும் முருகேசன் (40) என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ் அலங்காநல்லூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. விபத்துக்குக் காரணமான பஸ் டிரைவர் மகேந்திரன்போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications