பா.ம.க. மீண்டும் உடைந்தது
சேலம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் சேலத்தில் வன்னியர் விடுதலை சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
சேலம் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் உள்கட்சி பூசல் ஏற்பட்டு வந்தது. இங்கு மாவட்ட செயலராக பதவி வகித்து வரும் கார்த்திக்,கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக மாவட்டத் துணைச் செயலராக இருந்த எஸ். ஆர் பார்த்திபன் மற்றும் அவரது ஆதரவாளர்களைகட்சியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து மேலிடத்தின் கவனத்திற்கு இதனை பார்த்திபன் எடுத்துச் சென்றார். இதையடுத்து அவர்களுக்கு கட்சி மேலிடம் மீண்டும் அங்கீகரம் அளித்துகட்சியில் இடம் அளித்தது. அதேசமயம், பார்த்திபன் மற்றும் அவரது கோஷ்டியினருக்கு எவ்வித பொறுப்பும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில்பார்த்திபன், அவரது ஆதரவாளர்கள் சின்னப்பன், கந்தசாமி, கனல் கணேசன், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் உட்பட ஏராளமான தொண்டர்கள் அணி திரண்டனர்.ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையின் முடிவில், பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். பின்னர் வன்னியர் விடுதலைசங்கம் என்ற அமைப்பை துவக்கினர். இவர்களின் கொடியையும் இந்தக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினர். மஞ்சள்வண்ணத்தில் உள்ள இந்தக் கொடியில் கர்ஜிக்கும் சிங்கம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கூட்டத்தில் எம். சின்னப்பன் பேசியதாவது:
பாட்டளி மக்கள் கட்சியில் உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை. கட்சியின்வளர்ச்சிக்காக நாங்கள் அயராது உழைத்தோம். டாக்டர் ராமதாசை முழுமையாக நம்பி, பல்வேறுஇடையூறுகளுக்கு இடையே நல்ல முறையில் இந்தக் கட்சியை உருவாக்கினோம். அதிகாரம் கிடைத்தவுடன்சேலம் மாவட்டச் செயலர் கார்த்தி, சுயநலமாகவும், சர்வாதிகாரம் படைத்தவர் போல செயல்படத் தொடங்கிவிட்டார். இதை டாக்டர் ராமதாசிடமே சென்று நே ரடியாகப் புகார் தெரிவித்தோம். பயனில்லை.
எனவே, நாம் கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது உருவாக்கியுள்ள புதிய சங்கத்தின்மூலம் வன்னிய மக்களின் பிரச்னைக்காகப் போராடுவோம். ஏழை, எளிய, சிறுபான்மையின மக்களுக்காகவும்நமது இயக்கம் பாடுபடும். இம்மாத இறுதியின் புதிய சங்கத்தின் மாநாடு நடத்தப்படும். அதில் புதிய நிர்வாகிகள்தேர்வு செய்யப்படுவர். அதுவரை சங்கத்தை பார்த்திபன், கணேசன், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நிர்வகிப்போம்.வரும் சட்டசபைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என மாநாட்டில் தீர்மானிப்போம் என்றார்.
அவர் பேசி முடிந்ததும், பாட்டளி மக்கள் கட்சியினர் தங்களது அடையாள அட்டைகளையும், பொறுப்புச்சான்றிதழ்களையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே நிர்வாகள் அவர்களைஅமைதிப்படுத்தினர். இச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாட்டளி மக்கள் கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்துமட்டுமல்ல, தங்களுக்கும் பாட்டளி மக்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ராமதாசுக்கு கடிதம்அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து தீரன் எம்.எல்.ஏ. விலகிச் சென்று தமிழ் பாமக வை ஆரம்பித்தார்என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியின் தூண்டுதலால்தான் தீரன் பாமக விலிருந்து விலகினார் என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications