பிரசாரத்திற்கு பிரியங்கா வருவாரா?
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி முடிவாகி விட்ட நிலையில், பிரசாரம் குறித்து காங்கிரஸ்தலைவர் சோனியாவுடன் விவாதிப்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனார் விரைவில் டெல்லி செல்லவுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக அணியில்போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் சேர்த்து 47 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.மீதமுள்ள 32 இடங்களில் 2 இடங்களில் முஸ்லீம் லீக் மற்றும் இந்திய குடியரசுக்கட்சிக்குத் தலா ஒரு இடங்கள் போக 30 இடங்களில் த.மா.கா. போட்டியிடவுள்ளது.
இந்த நிலையில், கட்சியின் தேர்தல் உத்திகள் குறித்து விவாதிக்க மூப்பனார் ஓரிருநாட்களில் டெல்லி செல்லவுள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச்சந்தித்து இதுகுறித்து விவாதிப்பார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சித் தலைவர்இளங்கோவன் டெல்லி சென்றுவிட்டார்.
மூப்பனாரும், சோனியாவும், இளங்கோவனும் பிற தலைவர்களும் இணைந்து தேர்தல்பிரசாரம் உள்ளிட்ட உத்திகள் குறித்து விவாதித்து முடிவு செய்வர்.
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தே பிரசாரத்தில்ஈடுபடவுள்ளன. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சோனியாவையும், அவரதுமகள்பிரியங்காவையும் பிரசாரத்தில் ஈடுபட வைக்க த.மா.கா திட்டமிட்டுள்ளது. பிரியங்காவருவாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் வந்தால் வெற்றிக்கு எளிதாகஇருக்கும் என்று த.மா.கா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சோனியா, ஜெயலலிதா, மூப்பனார் இணைந்தும் பிரசாரக் கூட்டத்தில் பேசுவர் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முக்கிய நகரங்களில் மட்டுமே இது இடம் பெறும்என்று தெரிகிறது.
த.மா.கா, காங்கிரஸுக்கு எந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும், என்ன தொகுதிகளைகேட்கலாம், யாருக்கு சீட் கொடுக்கலாம் என்பது குறித்தும் சோனியாவுடன், மூப்பனார்விவாதிப்பார் என்றும் த.மா.கா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!